பஞ்சாப் அணி, மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி, மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பஞ்சாப் அணி, முதல் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ûஸ வீழ்த்தி தொடரை உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. சொந்த மண்ணான மொஹாலியில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் மீண்டும், மேக்ஸ்வெல், கேப்டன் ஜார்ஜ் பெய்லி அதிரடி காட்டலாம். இருப்பினும், தொடக்க வீரர் சேவாக், டேவிட் மில்லர் ரன் குவிக்காதது அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு தடையாக உள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் சாம்பியனான பார்படாஸ் அணி, இந்தத் தொடரில் சாதிக்கும் முனைப்பில் உள்ளது. ஆனால், அந்த அணியின் முக்கிய வீரர்களான பொல்லார்டு, சோயிப் மாலிக், டுவைன் ஸ்மித் ஆகிய முக்கிய வீரர்கள் வேறு அணிகளில் ஆடுவது, பார்படாஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டால்பின்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் மோதல்: மொஹாலியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில், ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஸ்கார்சர்ஸ் அணி பேட்டிங்கில் ஆதம் வோஜûஸயும், பந்து வீச்சில் மிச்செல் மார்ஷையும் பெரிதும் நம்பியுள்ளது. நாதன் கெளல்டர் நைல் தன்னை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக நிலை நிறுத்த முயற்சிக்கலாம். அனுப வீரர் பிராட் ஹஜ்ஜும் அணிக்குப் பலம் சேர்க்கிறார்.

ஆனால், டால்பின்ஸ் அணிக்கு கேப்டன் மோர்னே வான் விக் உள்ளிட்ட பல வீரர்கள் பிரபலமில்லை என்றாலும், அந்த அணி போராட்ட குணம் நிறைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அணிஅணியைஆட்டத்தில்இன்றுஇருபதுஎதிர்கொள்கிறது.ஓவர்கிரிக்கெட்குரூப்சனிக்கிழமைசாம்பியன்ஸ்சுற்றுடிரைடென்ட்ஸ்தீவுகளின்நடைபெறவுள்ளபஞ்சாப்பார்படாஸ்போட்டில்மேற்கிந்தியத்லீக்
Comments (0)
Add Comment