பட்டம் வென்று அசத்திய நோவக்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஸ்பெயனில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்தது.

இதில்ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் “நம்பர்-1” வீரரான நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார். இந்த பரபரப்பான ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். 2வது செட்டில் எழுச்சி கண்ட முர்ரே 6-3 என பதிலடி கொடுத்தார்.

இதன் பின்னர் வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிச் 6-3 என வென்றார். இதனால் அவர் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன்பு 2011ல் ரபெல் நடாலை வீழ்த்தி கிண்ணம் வென்றிருந்தார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் அதிக முறை கிண்ணம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரபெல் நடாலை (28 முறை) பின்னுக்கு தள்ளி நோவக் ஜோகோவிச் (29 முறை) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆடவர்ஓபன்சாம்பியன்டென்னிஸ்நம்பர்-1நோவக் ஜோகோபட்டம்மாட்ரிட்
Comments (0)
Add Comment