முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனிக்கன் குளம் கிராமத்தில் மாணவர்களுக்கான மாலைநேர வகுப்பு தொடக்கிவைக்கப்பட்டது.
புலம்பெயர் உறவு ஒருவரின் பணப்பங்களிப்பில் குறித்த வகுப்புக்கள் தொடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.
இந் நிகழ்வானது 2018.11.01 இன்றைய நாள் பனிக்கன்குளம் பொதுநோக்கு மண்டகத்தில், கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் திருவாளர் சண்முகம் தவசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களதுகருத்துரைகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக, முன்னைநாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள்,கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயசங்கர் -சுவேனியா, கிராம உத்தியோகத்தர் செல்லத்தம்பி செந்தில் நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்திருந்தனர்.
மேலும் குறித்த மாலைநேர வகுப்புகள் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் உறவான ப.சிறீதரன் அவர்களின்பணப்பங்களிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.