பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் இனஅழிப்பை எடுத்துக்காட்டும் தமிழ்வான்

நேற்று 25.02.2014 அன்று தமிழ்ச் சிற்றூர்தி (TamilVan) சுவீடன் நாட்டின் தலைநகரத்தை வந்தடைந்து அங்கு பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் இனஅழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக கண்காட்சி வைத்தனர்.

அத்தோடு பல்லின மக்களுக்கான மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் சுவீடன் வாழ் தமிழ் மக்கள் தமிழ்ச் சிற்றூர்தி மனிதநேயச் செயற்பாட்டாளர்களுடன் ஒன்றிணைந்து தாயக மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் செயற்பட்டனர்.

இவ் நிகழ்வில் பல வேற்றின மக்கள் ஆர்வமாக தமிழ்ச் சிற்றூர்தி தகவல் மையத்தை நாடி தமிழ் மக்களுக்கான ஆதரவைத் தெரிவித்தனர். இறுதியாக தமிழ்ச் சிற்றூர்தி மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் சுவீடன் வெளிவிவகார அமைச்சிடம் மனுக்கையளித்தனர்.

இவ் நிகழ்விற்கு சுவீடன் தமிழர் பேரவை மற்றும் சுவீடன் தமிழ் இளையோர் அமைப்பும் தமது ஆதரவைத் தெரிவித்து தமிழ்ச் சிற்றூர்தி மனிதநேயச் செயற்பாட்டாளர்களை மனமார வரவேற்றனர். இன்று மாலை மக்கள் சந்திப்பு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்வான்
Comments (0)
Add Comment