பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை

பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே இன்று தொடக்கம் 22 ஆம் திகதி வரை பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரயில் பாதையிலேயே இந்த பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடுகதி ரயில் பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று, நாளை, நாளைமறுதினம் இடம்பெறவுள்ளதால் ரயில் பாதையின் அருகில் பயணிப்பவர்கள், கடவையை கடப்பவர்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் கால்நடைகளின் நடமாட்டத்தை ரயில் பாதையருகில் கட்டுப்படுத்தும் படியும் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ்.நகரில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாவற்குழி பகுதியில் 15௦ மீற்றர் நீளத்திற்கு கடலை ஊடறுத்து செல்லும் பாலம் அமைக்கும் பணிகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

22 ஆம்அதிவேகஅறிவிக்கப்பட்டுள்ளது.இடையேஇன்றுசேவைதிகதிதொடக்கம்நடத்தப்படவுள்ளதாகபரீட்சார்த்தபளைக்கும்யாழ்ப்பாணத்துக்கும்ரயில்வரை
Comments (0)
Add Comment