பாகிஸ்தான் மக்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தையே விரும்புவார்கள் – அப்ரிடி

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி ‘இணையதளம்’ ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கேப்டன்ஷிப் அணுகுமுறையில் மிஸ்பா உல்-ஹக்கிடம் இருந்து நான் முற்றிலும் வித்தியாசமானவன். நான் ஆக்ரோஷமாக விளையாடுவதையே எப்போதும் விரும்புகிறேன். 

ஆக்ரோஷமாக செயல்படும் போது சில நேரம் இழப்பை (தோல்வி) சந்திக்க வேண்டி வரும் என்பதை அறிவேன். ஆனால் கேப்டன் என்பவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். களத்தில் ஆவேசம், முழு முயற்சி, போராட்ட குணம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போது சாதகமான முடிவும், சிறந்த செயல்பாடும் தானாகவே வெளிப்படும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். 

பாகிஸ்தான் மக்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தையே விரும்புவார்கள். எனது வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள். எனக்கும் அதுதான் பிடிக்கும்.’ என்றார்.

. களம்20 ஓவர்அணிஅப்ரிடிஆவேசம்இணையதளம்கிரிக்கெட்குணம்கேப்டன்பாகிஸ்தான்பேட்டிமிஸ்பா உல்-ஹமுயற்சிவீரர்கள்
Comments (0)
Add Comment