பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து இருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாலோகனை தவிர்க்க மேலும் 65 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 357 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. 23 ரன் குறைவாக எடுத்ததால் அந்த அணி ‘பாலோஆன்’ நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா ‘பாலோஆன்’ கொடுக்கவில்லை. யாசிர்ஷா 5 விக்கெட் கைப்பற்றினார். 222 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.

தேவேந்திர பிஷுவின் அபாரமான சுழற்பந்து வீச்சால் பாகிஸ் தான் நிலை குலைந்தது. அந்த அணி 31.5 ஓவர்களில் 123 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 346 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஷபிஅஸ்லம் அதிக பட்சமாக 44 ரன் எடுத்தார். தேவேந்திர பிஷூ 49 ரன் கொடுத்து 8 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிறப்பாக வீசிய வெளிநாட்டு பவுலர் என்ற சாதனையை பெற்றார். 346 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் பிராத் வெயிட் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டான ஜான்சன்- பிராவோ ஜோடி பாகிஸ்தான் பந்து வீச்சை நம்பிக்கையுடன் ஆடியது. ஜான்சன் 47 ரன்னில் அவுட் ஆனார்.

இந்த இரண்டு விக்கெட்டையும் முகமது அமீர் கைப்பற்றினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்து இருந்தது. பிராவோ 26 ரன்னும், சாமுவேல்ஸ் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் வெற்றிக்கு மேலும் 251 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெற்றி பெறுவது பாகிஸ்தானா? வெஸ்ட் இண்டீசா? என்பது கடைசி நாள் ஆட்டத்தில் தெரியவரும். இதனால் 5-வது நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

அணிகள்ஆட்டம்இரவுஇழப்புதோல்விபகல்பாகிஸ்தான்மோதல்விக்கட்வெற்றிவெஸ்ட்இன்டீஸ்
Comments (0)
Add Comment