பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் உள்ள குல்ஷன்-, இக்பால் பூங்காவில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 65 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதுடன். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பாகிஸ்தானையே அதிரச் செய்துள்ளது. லாகூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில்நேற்று பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாலை நேரத்தில் குழந்தைகள், குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். ஈஸ்டர் திருநாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் இருந்தது. எனினும், பூங்காவிற்கு வெளிப்பகுதியிலோ அல்லது உள்பகுதியிலோ எவ்வித பாதுகாப்பும் இல்லை.திடீரென பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் நிலைகுலைந்தது. பூங்கா முழுவதும் ரத்த வெள்ளமாகவும், ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடப்பதையுமே பார்க்க முடிகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்திற்கும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.