பாக்கிஸ்தானிடம் தோற்றது இங்கிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.

பேர்ஸ்டோவ், ஜோ ரூட் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 80 ரன்னாக இருக்கும்போது பேர்ஸ்டோவ் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஜோ ரூட் 46 ரன்கள் எடுத்த நிலையிலும், மோர்கன் 33 ரன்கள் எடுத்த நிலையிலும் பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து வந்த அதிரடி மன்னன் பட்லரும் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியோடு பெவிலியன் திரும்பினார்.

இதனால் 34.1 ஓவரில் 148 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறியது. ஒரு புறம் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்றாலும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 6-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மொயின் அலி 11 ரன்னிலும், ரஷித் 7 ரன்னிலும் அவுட்டாக, பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி விக்கெட்டாக வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து அணி 49.5 ஒவரில் 211 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் அறிமுக வீரர் ரயீஸ், ஜுனைத்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும், ஹசன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. 300 பந்தில் 212 ரன்கள் என்பது எளிதானதுதான். ஆனால் இங்கிலாந்தின் வேகத்தை தாக்குப்பிடித்து நிலைத்து நின்று விளையாடினால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்துகிரிக்கெட்சாம்பியன்தோல்விபாக்கிஸ்தான்விளையாட்டு
Comments (0)
Add Comment