பாக்கிஸ்தானின் தொடர் தோல்வியால் விசனத்தில் ரசிகர்கள்

பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்வியால் பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கான் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒரு சரியான வரைமுறை இல்லை.

அவர்கள் திறமைக்கு மதிப்பதில்லை. வேண்டியவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். கிரிக்கெட் அறிவே இல்லாதவர்கள் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கிறார்களே என்று மக்கள் கவலைப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பதவியிலிருந்து வக்கார் யூனிஸ் விலக வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் ரஷீப் லத்தீப் கூறியுள்ளார்.

அணிகணக்கசுற்றுப்பயணம்படுதோல்விபாக்கிஸ்தான்போட்டிவங்கதேசம்விமர்சனம்
Comments (0)
Add Comment