அப்போது, பெண்கள் பிரிவில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில், அங்கிருந்த 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.