முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் முதலாவது அமர்வு நேற்றையதினம் காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்றது
இன்று காலை பத்து மணிக்கு பாண்டியன்குளம் நகரப்பகுதி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து தவில் நாதவர வாத்தியங்கள் முழங்க பாடசாலை மாணவர்களில் பாண்ட் வாத்திய அணியினர் இசைமுழங்க விருந்தினர்கள் பாடசாலை வளாகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்
அதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்ட சரஸ்வதி சிலையினை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா திறந்துவைக்க சரஸ்வதி சிலைக்கு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளைமாலை அணிவித்தார்
தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் பொன்விழா ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுகல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது
அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் நினைவு மலர் வெளியீடு நினைவுரைகள் இடம்பெற்றன