தங்கள் அணிக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் 8ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில் இந்தியா வருவதை பாகிஸ்தான் அணி நிர்வாகம் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சகர்யர்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியினரின் பாதுகாப்பிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்தான் பொறுப்பேற்க வேண்டும் என சகர்யர்கான் கூறினார்.