மனித வரலாற்றில் பாரியளவில் குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பலிகொடுக்கப்பட்டதாக கருதப்படும் குழந்தைகளின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
கிட்டத்தட்ட 140 குழந்தைகளுக்கும் அதிகமானோர் பலிகொடுக்கப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த குழந்தைகளைன் எச்சங்கள் 550 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள்
இந்நிலையில் மனித வரலாற்றில் பாரியளவில் குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட சம்பவமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.