பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்!

இலங்கையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உறுதி செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் baroness joyce anelay தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் மற்றம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்இலங்கைநிரந்தர தீர்வுபாலியல் வன்கொடுமைபிரித்தானியா
Comments (0)
Add Comment