சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.
தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார்.
இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார்.
நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே” என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.
இந்த மந்திரத்தினை சிவாலயத்தில் 108 தடவைக்கு குறையாமல், 48 நாட்கள் தொடர்ந்து, செபித்து வந்தால் நாம் நமது ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நமக்கு முன் ஏழு தலைமுறையினர் அதாவது பித்ருக்கள் செய்த பாபத்தினால் ஏற்பட்ட சாபம், பாவம் அனைத்தும் நீங்கும்.
பிரதோச வகைகள்
1. நித்திய பிரதோசம்:-
தினமும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. நட்சத்திர பிரதோசம்:-
திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.
3. பட்ச பிரதோசம்:-
அமாவாசைக்குப் பிறகான சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது.
4. மாதப் பிரதோசம்:-
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்நாளில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது. “பாணலிங்க” வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
5. பூர்ண பிரதோசம்:-
திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் அதாவது திரயோதசி திதியும் சதுர்த்தசி திதியும் சேராது திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இப் பிரதோச வேளையில் சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டிப்புப் பலனை அடைவார்கள்.
6. திவ்ய பிரதோசம்.:-
துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும். இதனால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7. அபய பிரதோசம்.:-
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில வரும் பிரதோசங்களாகும். இப் பிரதோசத்தை சப்தரிஷி பிரதோசம் என்றும் அழைப்பர். பிரதோஷ வழிபாடு செய்து சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
8. தீபப் பிரதோசம்:-
திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது. இதனால் சொந்த வீடு கிட்டும்.
9. சப்த பிரதோசம்:-
திரயோதசி திதியில் ஒள~ன நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.
10. மகா பிரதோசம்.:-
ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.