இவரது நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.
இந்நிலையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானாது. இந்த படத்தை ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஆகிய நடித்துள்ளார்.
ஜெயம்ரவியுடன் இவர் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.