பிரான்சிலிருந்து இலங்கை வந்த தந்தை-மகள் கொழும்பில் கைது!

பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ.தியாகராஜா (வயது 52 ) மற்றும் அவரது மகளான தி.ஜனனி (வயது 24 )ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தொிவிக்கின்றன.
அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைதிற்கான காரணம் தெரியவில்லையெனவும்சு கூறப்படுகின்றது.
இதேபோன்று வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேச இளம் குடும்பஸ்தர் ஒருவர் விமானநிலையத்தினில் வைத்து காணாமல் போயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைகுற்றத்தடுப்புபிரான்ஸ்புதுக்குடியிருப்புமுல்லைதீவுவிமான நிலையம்
Comments (0)
Add Comment