பிரான்சில் தொடரப்படும் 11ஆவது நாள் விடுதலைச்சுடர் போராட்டம்

பிரித்தானியாவிலிருந்து  ஐ நா நோக்கி ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் 11ஆவது நாளாக பிரான்ஸ் நாட்டில் தொடரப்படுகிறது.

பிரித்தானியாவில்  பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை 10, Downing Street முன்பாக ஆரம்பமான  விடுதலைச்சுடர் போராட்டம், பெப்ரவரி 14ஆம் நாள்  சனிக்கிழமை காலை 10 மணிக்கு 11ஆவது நாளாக, லண்டன் புறநகர் பகுதியான Crawley Southgate இலிருந்து  ஆரம்பமானது. திரு எஸ் கண்ணன் அவர்கள் விடுதலைச்சுடரையும், விடுதலைச்சுடர் போராட்டத்திற்கான பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் திரு உதயனன் அவர்கள் தமிழீழத்தேசியக்கொடியையும் ஏந்தியவாறு செல்ல, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயர்பாட்டளர்களுடன் தீபன், சுகிர், இந்திரன் ஆகியோரும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட  நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.

லண்டன் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 11ஆவது நாள் விடுதலைச்சுடர் பயணமானது மாலையில் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.

பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ்  நோக்கி செல்லும் போது, விடுதலைச்சுடரினை பிரித்தானியத் தமிழ் இளையோரமைப்பைச் சார்ந்த திரு சதா அவர்கள் ஏந்திச் சென்று, பின்னர் பிரான்ஸ் தமிழ் இளையோரமைப்பைச் சார்ந்த திரு நிருபன் அவர்களிடம் கையளித்தார். பிரான்ஸ் மக்கள் பேரவையைச் சார்ந்த திரு தினேஷ் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறே செல்ல பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு திரு ரூபன், பிரான்ஸ் தமிழ் இளையோரமைப்பு திரு ஆகாஷ் ஆகியோர் ஐ நா நோக்கி முன்னெடுக்கப்படும் 11ஆவது நாள் விடுதலைச்சுடர் பயணத்தைப் பிரான்ஸ் நாட்டில்   தொடர்ந்தனர்.

11ஆவதுதொடரப்படும்நாள்பிரான்சில்போராட்டம்விடுதலைச்சுடர்
Comments (0)
Add Comment