பிரிந்த தம்பதிகளை சேர சுக்கிர பகவானை வழிபடவேண்டும்.
சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் இருக்கவேண்டியது அவசியம்.
அழகு, வசீகரம், பகட்டான வாழ்வு, அதிர்ஷ்டம் அனைத்துக்கும் சுக்கிரனின் பார்வையே காரணம்.
ஆகவே காதலில் சிக்கல் உள்ளவர்கள் பிரிந்திருக்கும் தம்பதிகள் சுக்கிர பகவானிற்கு சில பரிகாரங்களை செய்தால் எளிதில் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலஷ்மி வழிபாடு செய்தால் ஹம்பதிகளிற்கு இடையில் ஒற்றுமை ஓங்கும்.
மாலையில் அம்பாள், அம்மன், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது மிகவும் நல்லது.