ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு பிரெஞ்சு ஓபன் ஆடுகளம் நன்கு பரிச்சயமானது. வெற்றி பெற வாய்ப்புள்ள இந்த களத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த அவர், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றில் செக் குடியரசின் லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.
ஆனால், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சபரோவாவின் சர்வீஸ்களை முறியடிக்க முடியாமல் ஷரபோவா தடுமாறினார். முதல் செட்டை போராடி இழந்த ஷரபோவாவின் முயற்சியை 2-வது செட்டிலும் சபரோவா தடுத்தார். இறுதியில் 6-7, 4-6 என்ற செட்கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.