இதன் பிரகாரம் மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்தாகவும் அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட மறுவாழ்வுக் கிளையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.அந்த உதவித்தொகையை யாழ்ப்பாண மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மைத்திரி ரணில் அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளிற்கு பத்தாயிரம் வழங்கி இந்த அரசு சாதனை படைக்க முன்வந்தள்ளதாம்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொழில்வாய்ப்பின்றி விசாரணை வளையத்தினுள் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வாழ்ந்துவருகின்றனர்.இந்நிலையில் சர்வதேசத்தை ஏமாற்ற அரசு பத்தாயிரம் ரூபாவுடன் புறப்பட்டுள்ளது.