இது மட்டுல்லாது இலங்கைக்கு உண்டியல் மூலம் பணம் அனுப்புவதாக கூறியும் பலரிடம் மோசடி செய்துள்ளார்.இவர் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
சுவிஸ் நாட்டில் போலியான ஒரு கடல் உணவு நிறுவனத்தினை (http://www.swissseafoodimport.com ,http://www.rainbowfoods.lk ) இவர் தொடங்கி பல வருடங்களாக சாதுரியமாக ஏமாற்றி வந்துள்ளார். இலங்கையிலருந்து ஐரோப்பாவிற்கு உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதாகவும் கூறிய போது பல புலம்பெயர் தமிழர்கள் இவரிடம் பல கோடி ரூபாய்க்களை கொடுத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டினரும் கூட இவரது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் எல்லோரிடமும் தான் பெரிய தொழிலதிபரைப் போல் நடித்து சாதுரியமாக ஏமாற்றியுள்ளார். இவர் சரளாக நான்கு மொழிகளில் பேசக்கூடியவர். இதனை வைத்து இவர் பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இவரிடம் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உங்களது நாட்டிலுள்ள காவல்துறையிடம் முறைப்பாடு செய்து இவரது உண்மை முகத்தினை வெளிக்கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரும் மீள பணத்தினை பெற முடியும்.
அத்துடன் மக்களிடம் மோசடி செய்த பணத்தில் இவர் உல்லாசமாக ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று மறைந்து வாழ்ந்து வருகிறார். மேலும் இவரை இலங்கை காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.இவர் தொடர்பான முழு விபரங்களையும் தந்துள்ளோம். எனவே புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள் இவர் பற்றிய விபரங்களை பார்த்த பின்னர் உங்களது வியாபாரங்களில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுகொள்கிறோம்.