பெல்ஜியத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வு!

நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. திரு. ஜெயராஜ் (கலை பண்பாட்டு கழகம்) , திரு. இளமுருகன் (தமிழர் கல்விக்கழகம் ) ஆகியோர் மங்கல விளக்கேற்றினர். திரு. கிருபானந்தன் (ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவர் ) , திரு. சிவபாலன் (மனித நேய பணியாளர்), திரு. சகாதேவன் (மனித நேய பணியாளர்) ஆகியோர் பொதுச்சுடர் விளக்கேற்றினர். பெல்ஜியத்தில் பொங்கல் விழா ஒன்றில் வரலாறு காணாத அளவு மக்கள் ஏழுசியுடன் கலந்து கொண்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வழிகாட்டலில் தொடர்ந்து தமிழீழ விடுதலை போராட்டத்தில் தொடர்ப்பித்தும் பயணிப்போம் என உறுதி கொண்டனர்.
மங்கல நாதஸ்வர இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பம் ஆனது. முத்தமிழ் நிகழ்வுகளுடன் , தாயாக நாடகக் வித்துவான்கள் இணைத்து புலத்தில் பொங்கல் என்ற நடக்கத்தினால் மக்களை மகிழ்வித்து மக்களிடம் கரகோசங்களைப் பெற்றுக்கொண்டனர். தமிழர் கல்வி கழக மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பு நிகழ்சிகளாக பல நிகழ்வுகளை வழங்கினார்கள். ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவர் திரு கிருபானந்தன்அவர்கள் சிறப்புரை வழங்கியிருந்தர். சிறப்புரையில் வரலாற்றை பாடமாக கொண்டு போலிகளின் குழப்பத்திற்கு மக்கள் குழம்பாது எப்படி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வழிகாட்டலில் பயணித்தார்களோ தொடர்ந்து பயணிப்போம் என கூறியிருந்தார்.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பும். மனிதநேய ஈரூரூளி பணியாளர்களுக்கு கௌரவிப்பும் , கலை வித்துவான்களையும் கௌரவித்து தொடர்ந்து எமது தாயாக நிலத்தை மீட்கும் வரை தமிழரை ஒருமையாக மாவீரர் துணையுடனும் , தலைவரின் வழிகாட்டலில் பயணிப்போம் என உறுதி மொழியுடன் நிகழ்வு நிறைவு அடைந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுநிகழ்வுபெல்ஜியம்பொங்கல்
Comments (0)
Add Comment