குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.
வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழை வாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.