பொதுவேட்பாளர் ஒருவருக்கே கூட்டமைப்பு ஆதரவளிக்கும் – சுரேஷ் பிரேமச்சந்தின்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல், காணி சுவீகரிப்பை நிறுத்தல், வலிகாமம் வடக்கு – சம்பூர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதிகளை மீளக்குடியேற்றல் உட்பட்ட விடயங்களில் உறுதியை வழங்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கே கூட்டமைப்பு ஆதரவளிக்கும்.

அந்த வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாக, ரணில் விக்கிரமசிங்கவாக அல்லது கரு ஜெயசூரியவாக இருக்கலாம். எவரானாலும் தமிழ் மக்களுக்கு இந்த உறுதிமொழியை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம்உறுப்பினர்சுரேஸ் பிரேமச்சந்திரன்ஜனாதிபதிதமிழர்கள்தீர்வுநாடாளுமன்றம்பிரச்சனைபொதுவேட்பாளர்
Comments (0)
Add Comment