‘ப்ரைன்லெஸ்’ என்று கூறிய மஞ்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த பொல்லார்டு!

ஐ.பி.எல். தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் ராணா, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 12.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 47 பந்தில் 82 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பொல்லார்டு களம் இறங்கினார். அவர் 17-வது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். பொல்லார்டு 17 பந்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது 23 பந்தில் 60 ரன்கள் தேவைப்பட்டது.

அதன்பின் ராணா, ஹர்திக் பாண்டியா அணியை வெற்றி பெறச்செய்தனர். பொல்லார்டு 13-வது ஓவரில் களம் இறங்கும்போது, வர்ணனையாளராக செயல்பட்ட மஞ்ரேக்கர், முன்னதாக களம் இறங்கி விளையாடுவதற்கான புத்தி பொல்லார்டுக்கு இல்லை என்று பேசியதாக தெரிகிறது.

இதனால் பொல்லார்டு மனவேதனை அடைந்தார். இதுகுறித்து டுவிட்டரில் மஞ்ரேக்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பொல்லார்டு தனது டுவிட்டரில் ‘‘சஞ்சய் மஞ்ரேக்கர், உங்களுடைய வாயில் இருந்து நேர்மறையான கருத்துக்களை வெளியிட முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் இதுபோன்று தொடர்ந்து பேசினால், அதற்கான விலை கொடுக்க வேண்டும்.

நான் எப்படி அதிரடியாக விளையாடுவேன் என்பது குறித்து உங்களளுக்கு தெரியுமா? பிரைன்லெஸ்… வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. ஒருமுறை பேசிவிட்டால், அதன்பின் அவற்றைத் திரும்ப பெற முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல்.கிரிக்கெட்டுவிட்டர்விளையாட்டு
Comments (0)
Add Comment