மகளிர் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார் சானியா

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து சாம்பியன் பட்டங்கள் வென்றார். இதனால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில், முதலிடத்தை பிடித்தார். அதன்பின்னரும் அவர் பல்வேறு போட்டிகளில் முத்திரை பதித்ததால் அவரது தரநிலையில் மாற்றம் இல்லை.

 இந்நிலையில், முன்னணி வீராங்கனைகள் மோதிய டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், அரையிறுதி வரை முன்னேறிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகடெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இந்த தோல்வியால் சானியாவின் தரநிலையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  இன்று வெளியிடப்பட்ட டென்னிஸ் தரவரிசையில், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிஸ்) இரண்டாமிடத்திலும், கேசே டெல்லக்வா (ஆஸி.) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.  முதலிடத்தை தக்க வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய சானியா, இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்திருப்பது மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்தார்.  ‘டென்னிஸ் தரவரிசையில் உச்சத்தை தொடுவது என்பது மிகப்பெரிய சாதனை என்று எப்போதும் நினைப்பேன். ஆனால், அந்த கடின இலக்கையும் தாண்டி இப்போது முதல் முறையாக நீண்ட காலம் முதலிடத்தில் இருக்கிறேன். இது திருப்தி அளிக்கிறது. நீண்ட காலம் முதலிடத்தில் இருந்தவர்களில் எனக்கு முன்பாக நவரத்திலோவா, பிளாக் மற்றும் ஹியூபர் மூன்று முன்னணி வீராங்கனைகள் உள்ளனர்’ என்றார் சானியா.

இரட்டையர்சானியா மிர்சாடென்னிஸ்பிரிவுமகளிர்முதலிடம்
Comments (0)
Add Comment