ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான தொல்பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட புராதான பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவை மகிந்தராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் முற்றாக அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் அனுராதபுரம், பதவிய என்ற இடத்தில் தமிழ் மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் மீட்கப்பட்டிருந்தன. அவை தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் – சின்னபூவரசன்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புராதன தமிழர்களுக்கு சொந்தமான மட்பாண்டங்கள, ஓடுகள் போன்றன மீட்கப்பட்டிருந்தன.
அவை மாவட்ட அரசாங்க அதிபரிடம் பொது மக்களால் வழங்கப்பட்டதன் பின்னர்,அது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.