மன்னாரில் மற்றுமொரு பாரிய மனித புதைகுழி?

மன்னாரில் மற்றுமொரு பாரிய மனித புதைகுழி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பாரிய மனித புதைகுழி பகுதிக்கு அருகாமையில் மற்றுமொரு பாரிய மனித புதைகுழி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாழடைந்த கிணறு ஒன்றில் இவ்வாறு அதிகளவான சடலங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக பாரிய மனித புதை குழி ஒன்றிலிருந்து 96 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த கிணறு எதிர்வரும் 29ம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிணற்றை தோண்டி சடலங்கள் பற்றி ஆராயுமாறு மன்னார் நீதவான் ஏ. அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

திருக்கேதீஸ்வரம்மனிதப் புதைகுழிமன்னார்
Comments (0)
Add Comment