மனித எச்சங்கள் மீட்கப்படும் இடங்களிற்கு அருகாகில் குடியமர்ந்துள்ள குடும்பங்களது வீடுகளிற்கு சென்ற படை அதிகாரிகள் குழுவொன்று அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக சாட்சியமளிக்க வற்புறுத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அருகாகவுள்ள தேவாயலயமொன்றை மையப்படுத்தி இடுகாடு இருந்ததாகவும் அந்த இடுகாட்டிலேயே சடலங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்க வேண்டும் என அனைவரையும் வற்புறுத்தியதாக தெரிய வருகிறது.
இத்தகவலை உறுதிப்படுத்திய தமிழரசுக்கட்சி இளைஞரணி தலைவரும் சிவில் சமூக பிரமுகருமான சிவகரன் குறித்த பகுதி மக்கள் 1990ம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்றதாகவும் தற்போதே மீளக் குடியமர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் அதன் பின்னராக அங்கு நடந்தவை பற்றி அம்மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை செய்ததாக காட்ட நினைத்து அறிக்கைகள் விட்ட சிறிலங்கா அரசும் அதன் கூலிப்படைகளும் அது வெற்றி அளிக்காததைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கையாக மயானம் என காட்ட தற்போது குடியேறி உள்ள மக்களை வற்புறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.