மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தற்போது அந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாடத்தை சிவில் சமூக அமைப்பினர் முன்னெடுத்தனர். இதன்போது, மரண தண்டனையை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக மக்கள் கோசமிட்டனர்.
ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்திற்கு மேற்குலக நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.இவ்வாறான நிலையிலேயே, தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.