போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ‘ நாம் இலங்கையர் ‘ என்ற அமைப்பினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழுப்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி சேயா மற்றும் மாணவி வித்யா ஆகியோரது மரணத்திற்கு போதைப் பொருள் பாவனையாளர்களே காரணம் என்றும், எனவே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் எந்த தவறும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களே இருப்பதாகவும், அவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்கார்கள் வலியுறுத்தினர்.