மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 12-வது இடத்தில் உள்ள மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆன்டி முர்ரே 6-2, 6-0 என்ற நேர்செட்டில் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீரர் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சாய்த்து அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.