29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 02.02.2014 இன்று ஐந்தாவது நாளாக 29km தூரத்தை கடந்து பெல்யீயம் நாட்டில் உள்ள அன்ட்வேர்ப்பன் (Antwerpen) நகரத்தை வைந்தடைந்தது.
நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள உறவுகள் பெல்யீயம் நாட்டில் வாழ்கின்ற தமிழ் உறவுகளை சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து கலந்துரையாடினார்கள். இன்றைய சந்திப்பில் கலந்துக் கொண்ட உறவுகள் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைபயணமானது வெற்றியளிக்க தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறிதியளித்தார்கள்.
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைபயணமானது நாளை புறுசல் (Brussel) நகரை சென்றடையவுள்ளது அன்றைய தினம் புறுசலில் (Brussel) உள்ள ஐரோப்பிய நாடுகளினுடைய தூதரங்களின் உயர்மட்டங்களிடையே சந்திப்புகளும் இடம்பெறவுள்ளது.
நடைபயணத்திற்கும் தமிழ் வண்டிப் பரப்புரை செயற்பாட்டுக்கும் வலு சேர்க்கும் முகமாகவும் எதிர்வரும் 10.03.2014 அன்று ஐ.நா.வின் மனிதவுரிமை மன்றின் முன் இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சிப் போராட்டமானது வரலாறு காண எழுச்சியாக திகழவேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் வாரியாக தமிழ் மக்களை ஒன்றிணைக்கின்ற செயற்பாடுகளில் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஈடுப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று யேர்மனி கைல்புறோன் (Heilbronn)நகரத்தில் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஓர் மக்கள் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சந்திப்பில் இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஐ.நா. முன்றலில் இடம்பெறவுள்ள எழுச்சிப் போராட்டத்தில் மக்கள் ஒன்றுகூட வேண்டிய தேவை குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு சூரீ, பிரித்தானியாவைச் சேர்ந்த திரு சிவந்தன், யேர்மனியைச் சேர்ந்த திரு செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு வித்தியானந்தன் ஆகியோர் மாவீரர்களினதும் மக்களினதும் நினைவுகளை மனத்தில் பதித்து உறுதியோடு நடந்து வருகின்றனர். தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் மாவீரர்களின் கனவுடன் 5ம் நாளாக வீரத்துடன் வீறுநடை போட்டுகொண்டிருக்கும் எமது உடன் பிறப்புக்களின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் .
தொலைபேசி – 0031684999900 மேலதிக தகவல் அறியத்தரப்படும்.