மாவீரர் தினத்தை மாற்றச்சொன்ன மாவையின் வருகைக்கு பிரான்ஸ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

உலகப் தமிழ் பண்பாட்டு இயக்கம் வருடாந்தம் மாநாடுகளை நடாத்தி வருகின்றது. இந்த அடிப்படையில் வருடா வருடம் உலகத்தில் பல நாடுகளில் இருந்து பல அறிஞர்கள் அழைத்து அவர்களை பாராட்டுவது வழக்கம்.
அதே நேரத்தில் தாயகத்த்தில் இருந்து தமிழ் மக்களின் பண்பாடுகளை பாதுகாப்பவர்கள் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என்றும் மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் வேறு சிலரை அழைத்து தமிழர் பண்பாட்டு பாதுகாவலர்கள் என்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துவதும் பல வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அதே போல் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு நடைபெற இருக்கின்றது.
இந்த வருடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டிக்கு அழைப்பு விடப்பட்டு இருப்பதாகவும் நம்பகத் தக்க தகவல்கள் எமக்கு வந்திருக்கின்றது.
இன்றைய கால சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக நடத்தும் இந்த மாநாட்டை நாம் வரவேற்கும் நேரத்தில் இன்று சிறிலங்கா அரசின் நல்லாட்சி என்று கூறும் ஆட்சியின், தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், தமிழ் இளைஞர் இடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு இருக்கும் சிறிலங்கா அரசின் பாதுகாவலர்களாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு பற்றுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.
அதிலும் முக்கியமாக அண்மைக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்த போது மேடையில் ரணில் நடுவில் இருக்க வலது பக்கத்தில் சுமந்திரனும் இடது பக்கத்தில் மாவை சேனாதிராஜாவும் இருக்க தமிழ் தாய் ரணில் காலில் விழுந்து அழுவதும், மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் எந்த வித நெகிழ்வு தன்மையும் இன்றி வெறும் பார்வையாளராக இருந்த படத்தை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். இதை போல் பல காட்சிகள் எமது தாயகத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வெறும் பார்வையாளராக இருந்து இருக்கிறார்கள், இருந்தும் கொண்டும் இருக்கிறார்கள்.
அதே போல் தமிழ் தாயக பிரதேசம் எங்கும் சிங்களமயமாக்கலில் சிக்குண்டு இருக்கும் போது அதை தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சிறிலங்கா அரசு ஆத்திரம் அடைந்து விடுவார்கள் என்று கூறி தமிழ் இன அழிப்புக்கு துணைபோய் கொண்டு இருக்கும் இவர்களையா நாம் பிரான்சில் வரவேற்கப் போகிறோம்?
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது காணாமல் போனோர் குடும்பத்தினரை பன் கி மூனுடன் சந்திப்பை உருவாகாமல் தவிர்த்ததும் பின் இவர்கள் மக்களை சென்று பார்க்கும் போது மக்கள் இவர்களை துரோகிகள் கள்ளர் என்று திட்டியதையும் கண்கூடாக நாம் பார்த்தோம்.
இவர்களா! தமிழ் மக்களுக்கு இன அழிப்பில் இருந்து பாதுகாக்க போகிறார்கள்?
இவர்களா! தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்கப் போகிறார்கள்?
பாரிஸ் 17 La Fourche அண்மையில் சர்ச் மண்டபத்தில் செப்டம்பர் 11 அல்லது செப்டம்பர் 12 ஆகிய தினங்களில் நடைபெறும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டால், உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்.
அல்லது உலகத்த தமிழ் பண்பாட்டு மாநாட்டை ஒழுங்கு செய்பவர்களிடம் இவர்களை அழைப்பதை தவிர்க்கும் படி அழைப்பு விடுங்கள்.

இன அழிப்புஉலகத்தமிழ் பண்பாடுகூட்டமைப்புபிரான்ஸ் மக்கள்மாவீரர்மாவை சேனாதிராஜா
Comments (0)
Add Comment