வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் மீண்டும் நாளை முதல்இயங்கவுள்ளது.
யுத்த காலத்தில் 1991ஆண்டுமுதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கிய குறி ஒத்த அறிவுச்சோலை இல்லத்தினில் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வந்த போதிலும் யுத்தம் காரணமாக குறித்த இல்லம் முழுமையாக அழிவடைந்தது.
மேற்படி இல்லத்தை மீளவும் இயங்குவதற்கு நீண்ட காலமாக பலரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக நாளைய தினம் 28ம் திகதி முதல் மீண்டும் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த அறிவுச்சோலை நிர்வாகத்தின் தலைவராக எஸ்.கே. இல்லாத தலைவர் கதிர்காமநாதனும் , செயலாளராக ஓய்வு பெற்ற அதிபர். க.இராசேந்திரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.