திருகோணேஸ்வரர் கோவிலும் அதனைச் சூழ உள்ள ஏனைய கிராமங்களுமாகும். இவ்வாறான தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் சென்று கொண்டேயிருக்கிறது. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று இதிகாச காலந்தொடக்கம் தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது.
ஆனால் தற்போது கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி முழுமையும் சிங்களவர்கள் குடியேறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் கன்னியா வெந்நீர் ஊற்றைப் பார்வையிட வருபவர்களிடம் ஒரு பௌத்த பிக்கு தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட துண்டுகளை விநியோகித்து பணம் பெறுவதாகவும் அவரே அங்கு சட்டமொழுங்கிற்கு பொறுப்பானவராக செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் யாவும் சிங்களவர்களுக்கு சொந்தமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்களது பிரதிநிதியாகவுள்ள கூட்டமைப்பு தலைமைக்கு இவையெவையும் தெரியாதாவென கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.