மீண்டும் தேசிய அணியில் வீரேந்திர சேவாக்

இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மீண்டும் தேசிய அணியில் விளையாடக்கூடிய தகமையுடன் உள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் அணியின் பிரதான பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து வெளியிடுகையில், சேவாக் நிச்சயமாக இந்திய அணிக்காக ஆடும் திறனோடுதான் உள்ளார்.சேவாக் மிகவும் உற்சாகப்படுத்தக் கூடியவர். அவர் தனது உடல் திறனை மேம்படுத்த அதிக பயிற்சிகள் செய்து வருகிறார்.

சேவாக் கௌரவமான முதல் தரமான போட்டிகளில் ஆடி உள்ளார். 36 வயதான சேவாக் உலக நட்சத்திர வீரர்களில் ஒருவராக உள்ளார் மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

 

அணிஅதிரடிஆட்டக்காரர்இந்தியஉள்ளதுதகமைதேசியமீண்டும்விளையாடவீரேந்திர சேவாக்
Comments (0)
Add Comment