காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், ‘நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம். அதன் மூலம் நட்டஈடும் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நாங்கள் விசாரணையை கைவிடமாட்டோம். நாங்கள் தொடர்ந்தும் விசாரிப்போம். எங்கள் விசாரணைகளில் உங்கள் பிள்ளைகள் கிடைக்கப்பெற்றால், மரணச் சான்றிதழை இரத்துச் செய்வோம். ஆனால், வழங்கிய நட்டஈட்டைத் திரும்ப கேட்கமாட்டோம்’ என்றனர்.
இவர்கள் இவ்வாறு பணத்தாசையை எம் மக்கள் மீது காட்டி எப்படியாவது இந்த விசாரணை எனும் நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நோக்கிலேயே மீண்டும் மீண்டும் மக்களிடம் இதனை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.