மீண்டும் வெற்றிக்கூட்டணி அமைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…

சேதுபதி படத்தில் இயல்பான போலிஸ்காரராகவும், அழகனா கணவராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இந்த படத்தை S.U.அருண் குமார்  இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து இயக்கி இருந்தார்.

தற்போது   அதே அருண்குமார் இயக்கத்தில்  மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு ‘சிந்துபாத்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

S.U.அருண் குமார்சிந்துபாத்’போஸ்டர்விஜய் சேதுபதி
Comments (0)
Add Comment