இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஜீ.பாரத்தசாரதி உட்பட இருவர் நேற்றைய தினம் யாழிற்கு வருகைதருகின்றனர்.
இதன்போது யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் வட மாகாணத்தின் கடல் எல்லையைக் கொண்ட நான்கு மாவட்ட மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆறு பேரைச் சந்தித்து உரையாடினார்.
இச் சந்திப்பின் நிறைவில் கூட்டாக கருத்து வெளியிடும்போதே மீனவ சங்கப் பிரதிநிதிகளே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண மீனவர்கள் நீண்டகாலம் எதிர்நோக்கும் பிரச்சணைகளிற்கு தீர்வு கானும் வகையில் ஓர் ஏழு அம்ச கோரிக்கையினை முன் வைத்தோம் .
அதில் குறிப்பாக இந்திய கரையில் இருந்து புறப்படும் மீனவர்கள் , இலங்கை மீனவர்கள் ஆகியோர் புறப்படும் இடங்களின் நேரே சர்வதேச எல்லையை அடையாளமிடல்.
அதேபோன்று இருநாட்டு மீனவர்களும் கடலில் தமது நாட்டின் எல்லையை அண்மிக்கின்ற நேரம் தானாகவே இயங்கி சமிக்கை எழுப்பும் மிதப்பைகளை கடலில் நாட்டுதல்.
அதேபோன்று இரு நாட்டு கடற்படையினரும் கூட்டினைந்து ரோந்தில் ஈடுபல் உள்ளிட்ட ஏழு கோரிக்கையினை முன்வைத்தோம்இவற்றினை இந்திய மத்திய அரசிற்கு தெரிவிப்பதாக பதிலளித்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து வட மாகாண ஆளுநர் , வட மாகாண முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.