மீள்குடியேறும் மக்களுக்கான அத்தியவசிய உதவிகளை உடனடியாக செய்யுங்கள் – சி.வி.வி.

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட வலி.வடக்குப் பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கான அத்தியவசிய உதவிகளை உடனடியாக செய்யுங்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (07/01/2016) மாலை 4 மணியளவில் விடுவிக்கப்பட்ட பகுதியினை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பித்தள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த வலி.வடக்கின் ஒரு பகுதியான 468.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற மக்கள் தமது காணிகளை இனங்கண்டு மீள்குடியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும், வலி.வடக்க பிரதேச சபையின் முன்னாள் உபதலைவருமான எஸ்.சஜீவனின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் இன்று மாலை விடுதிவித்த பகுதிகளை பார்வையிடச் சென்றிருந்தார்.

குறித்த பகுதியினை பார்வையிட்ட முதலமைசர் அங்கிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போது தமது காணிகளில் உள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்து தருமாறும், வீதிகளை புணரமைத்து தருமாறும், குடிநீர், வீடு மற்றும் மலசல கூடம் போன்ற அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் மக்கள் கேட்டுக் கொண்டனர். இதன் போது மக்களுக்கு தேவையான அத்தியவசிய தேவைகளை விரைவில் பெற்றுக் கொடுக்கமாறும் தெல்லிப்பளை பிரதேச செயலருக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார்.

அத்தியாவசியஆக்கிரமிப்புஇராணுவம்சிவி விக்னேஸ்வரன்பகுதிபொருட்கள்மக்கள்மீள்குடியேற்றம்வடக்குவலிகாமம்
Comments (0)
Add Comment