அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியுசிலாந்து அணி 202 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 224 ரன்களும் எடுத்தன. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியுசிலாந்து அணி மூன்றாவது நாளில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சான்ட்னர் 45 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 6 விக்கெட்டுகளையும், மிச்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
நிதானமாக விளையாடிய ஷான் மார்ஷ் 49 ரன்கள் எடுத்தார். நியுசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் பௌல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.