நடைபெறவுள்ள 2015ம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத் தொடர் சில முன்னணி வீரர்களுக்கு கடைசி உலகக்கிண்ண தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென்று ஒய்வு பெற்றார். அதனால் இவர் இந்த உலகக்கிண்ணப் போட்டியோடு எந்த நேரமும் வெளியேறலாம். அப்படி இல்லாவிட்டாலும் அடுத்த உலகக்கிண்ணப் போட்டி வரை நீடிக்க வாய்ப்பில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சங்கக்காராவுக்கு தற்போது 37 வயதாகிறது. இவர் இந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
அதே போல அந்த அணியின் 37 வயதாகும் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனேவும் ஓய்வு முடிவில் இருக்கிறார்.
மேலும் பாகிஸ்தானின் அப்ரிடி, மிஸ்பா-உல்-ஹக், அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், நியூசிலாந்தின் மெக்குல்லம், வெட்டோரி, தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோரும் இந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.