முன்னாள் போராளிகளின் இறப்பு தொடர்பில் பதிலளிக்க முடியாதாம்?

புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் இறப்பில் உள்ள சந்தேகங்களிற்கு பதிலளிக்க முடியாது. அது தொடர்பில் சுகாதார அமைச்சைக் கேளுங்கள் என   ஸ்ரீலங்காவின்  மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகளில் மட்டும் இதுவரை 103 போராளிகள் திடீர் சுகயீனம் மற்றும் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர்.

இதனால் புனர்வாழ்வுக் காலத்தில் இவர்களிற்கு தவறான  சிகிச்சை அளிக்கப்பட்டிருக்குமா என முன்னாள் போராளிகள் பலர் அஞ்சுவதனால் அவர்களை ஓர் சுயாதீன மருத்துவக் குழுமூலம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.

இதற்கான ஏற்பாட்டை செய்வீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் இறப்பில் உள்ள சந்தேகங்களிற்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் வாழ்க்கை என்பதே சந்தேகத்தில்தான் இருக்கின்றோம். சந்தேகங்களிற்கு தற்போது பதிலளிக்க முடியாது. இருப்பினும் இது சுகாதாரம் தொடர்பானது என்பதனால் சுகாதார அமைச்சிடம் கேளுங்கள். என்றார்.

அமைச்சுஇறப்புடி.எம் சுவாமிநாதன்புனர்வாழ்வுமர்மம்முன்னாள் போராளிகள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment