இதனால் இவ் விடயத்தினை உரிய வகையில் விரிவாக ஆராய்ந்து பார்த்த பின்பே கூறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இறுதி யுத்த காலத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளில் இது வரையும் 105 பேர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போராளிகளின் மரணம் அதிகரிப்பது தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந் து உள்ளன. இதனால் குறித்த விடயத்தினை முறையாக அறிய வேண்டும். அதன் காரணத்தைப் பெறவேண்டும்.
இதனையும் கையில் பெற்றபின்பே உரிய நடவடிக்கையினை எடுக்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்த பின் நிற்க மாட்டோம்.
முதலில் பேசிவிட்டு பின்பு செயலாற்ற முடியாது. இதில் கதைப்பது மட்டும் விடயம் அல்ல. குறிப்பாக எதனை மேற்கொண்டாலும் சர்வதேசம் மதிக்கத்தக்க வகையில் கருமங்களை ஆற்றவேண்டும். நாம் அவ்வாறே செயல்படுகின்றோம்.
இவ்விடயத்தினையும் நாம் கூறும்போது அதில் இருந்து விலக முடியாதவாறு கருமங்களை கூறவேண்டும்.
அதனால் இவ் விடயம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அதன்பால் பெறப்படும் உண்மை விபரங்களை எவரும் மறுக்கவோ அல்லது விலகவோ முடியாத வகையில் கருமங்கள் இடம்பெறும். என்றார்.