இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது.
இவர்களில் தெரிவுசெய்யப்படும் ஒருவர் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வார்.
முரளிதரன் இலங்கை அணிக்காக பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.
800 டெஸ்ட் விக்கட்டுகள், 534 ஒருநாள் விக்கட்டுகள், 13 டி20 விக்கட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கட்டுகளை 22 முறை கைப்பற்றியுள்ளதோடு, 67 முறை 5 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.