படத்தில் தன் பகுதிகளை குறைத்த இயக்குனர் முருகதாஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கீர்த்தி சுரேஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான விஜயின் சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால் அவர் அந்த ரோலில் கொஞ்ச நேரம் மட்டும் தான் தோன்றினார்.
இந்நிலையில் சர்க்காரில் அவர் தோன்றிய பகுதிகளில் சில நீக்கப்பட்டுள்ளதாம்.
இதனையடுத்து அவர் சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளாராம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தவிர பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் போது தன் ரோல் என்ன என்பதை மிக கவனமாக கேட்டு முடிவெடுக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் தன் காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என உறுதி வாங்கிக்கொள்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.