முல்லைத்தீவில் 59 வது டிவிசனின் கீழ் 28 தமிழ் இளைஞர்கள் படையில் இணைப்பு

முல்லைத்தீவில் சிறிலங்காப் படையினரின் 59 வது டிவிசனின் கீழ் 28 தமிழ் இளைஞர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.தற்பொழுது இவர்களுக்கான 16 வார கால பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது முல்லைத் தீவில் சிறீலங்காப்படையினரின் 59 வது டிவிசனின் 1ம் 2ம் 3ம் பிரிகேட்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.அத்துடன் புதுக்குடியிருப்பு, முத்தையன் கட்டு, மன்னாகண்டல் பகுதிகளில் 64வது டிவிசனின் 1ம் 2ம் 3ம் பிரிகேட் படையினரும் நிலைகொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால், நாயாறு, விசுவமடு, பகுதியில் சிறிலங்காப் படையினரின் 68வது டிவிசனின் 1ம் 2ம் 3ம் பிரிகேட் படையினரும் நிலைகொண்டுள்ளனர்.இவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகளை படையில் இணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.முள்ளிவாய்கால் தமிழின அழிப்பிற்கு சிறிலங்கா படைகளின் 59 டிவிசன் படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

16 வாரகாலதெரிவிக்கப்படுகிறது.நடைபெற்றுக்கொண்டிருப்பதாகபயிற்சி
Comments (0)
Add Comment